என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பன்வாரிலால் புரோஹித்
நீங்கள் தேடியது "பன்வாரிலால் புரோஹித்"
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal
இசை அமைப்பாளர் இளையராஜா இந்த ஆண்டு தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜாவை பெருமைப்படுத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டது.
வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ள ‘இளையராஜா 75’ விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பாராட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
அவர்களது அழைப்பினை ஏற்று வரும் பிப்ரவரி 2-ந் தேதி ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைக்கிறார்.
‘இளையராஜா 75’ என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற இருக்கிறார். அதைதொடர்ந்து முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மறுநாள் பிப்ரவரி 3-ந் தேதி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #BanwarilalPurohit
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார். #SterliteProtest #BanwarilalPurohit
சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் இன்று பேரணியாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.
இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக அரசுத்தரப்பு மற்றும் அனைத்து ஊடகங்களும் தெரிவித்துள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்திற்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், இன்று ஆளுநரிடம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். #NirmalaDevi #Santhanam #TNGovernor
சென்னை:
அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டதை அடுத்து இது தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். சந்தானம் குழுவினர் பல்கலைக்கழக அதிகாரிகள், சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் சந்தானம் இன்று விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். கடந்த வாரம் இந்த விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை அறிக்கையை வெளியிட தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi #Santhanam
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்கும் சந்தானம் குழு தனது விசாரணை அறிக்கையை வெளியிட சென்னை ஐகோர்ட் இன்று தடை விதித்தது. #NirmalaDevi #Santhanam
சென்னை:
அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டதை அடுத்து இது தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இந்த குழு தனது விசாரணை அறிக்கையை 12-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கணேசன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை வெளியிட தடை விதித்து உள்ளது. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #NirmalaDevi #Santhanam

×

X